“பிரதமர் நரேந்திர மோடியை நெஞ்சில் சுமக்கும் ஹனுமன் நான்”: Chirag Paswan

Spread the love


பாட்னா (Patna): பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு (Nitish Kumar) விமர்சித்து வருவது தொடர்பாக பாஜகவின்  எதிர்ப்பை சந்தித்து வரும் எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான், சனிக்கிழமை (அக்டோபர் 17) பிரதமர் நரேந்திர மோடியைப் (PM Narendra Modi) பாராட்டியதோடு, மாநிலத்தில் பாஜகவுடன் ஒரு அரசு அமைப்பதே தனது குறிக்கோள் என்று கூறினார் .

 “பிரதமர் என் இதயத்தில் வாழ்கிறார், நான் அவருக்கு ஹனுமனை போன்றவன். என்னை விமர்சிப்பவர்கள் விரும்பினால், என் இதயத்தைத் திறந்து காட்ட முடியும். நான் பிரதமரின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தேவையில்லை” என்று பாஸ்வான் கூறினார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல்  பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பயன்படுத்துவதை எதிர்த்து பாஜக எச்சரித்ததை அடுத்து, எல்ஜேபி தலைவர், ‘பிரதமர் தனது இதயத்தில் சுமந்து இருப்பதால், அவரது புகைப்படங்களை எடுத்துச் செல்ல  வேண்டிய தேவையில்லை என்று கூறினார்.

சிராக் பாஸ்வானின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இது வாக்குகளை பிரிக்கும் முயற்சி என்றும், இதன் மூலம் குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

ALSO READ | மத ஒற்றுமையை குலைப்பதாக கங்கனா மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்யவும்: நீதிமன்றம்

பீகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பிரிந்து, லோக் ஜனசக்தி கட்சிக்கு தலைமை தாங்கி தனியாக போட்டியிடும் பாஸ்வானை, முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள்,  பிரதமர் மோடியின் புகைப்படத்தை பிரச்சாரத்தில் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் எச்சரித்தனர்

37 வயதான தலைரான சிராக பாஸ்வான், எல்.ஜே.பி நிறுவனர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகனும் ஆவார். தேர்தலுக்கு முன்னதாக நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

எல்ஜேபி பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதுடன், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் இடங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்தது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய மூன்று கட்டங்களாக நடைபெறும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும்.

ALSO READ | அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களும் அரசு பள்ளியாக மாற்றப்படும்: அஸ்ஸாம் அமைச்சர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYe

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *