பிரபல பாடகர் SPB-யின் உடல்நிலை குறித்து மகன் வெளியிட்ட வீடியோ…!!

Spread the love


பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியணியத்திற்கு நினைவு வந்திருக்கிறது; உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக SPB-யின் மகன் சரண் தகவல்!!

பிரபல பின்னணி பாடகர் SP.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகனும் பின்னணி பாடகருமான மகன் எஸ்பிபி சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய 74 வயதுடையவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.  கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. “2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இதையடுத்து, தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவரது மகனும் பின்னணி பாடகருமான மகன் SPB சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ALSO READ | ரத்த டெஸ்ட் எடுக்கவந்த பெண்ணை கற்பமாக்கிய லேப் டெக்னீசியன்..!

அந்த வீடியோவில், எனது தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனிப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களை அவரால் அடையாளம் காண முடிகிறது. தொடர்ந்து வென்டிலேட்டரில் இருக்கும் எஸ்பிபிக்கு , சிறிது நாட்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது மூச்சுவிடுவதிலிருந்த சிரமம் சற்று குறைந்துள்ளதாகவும், இதை நல்ல முன்னேற்றமாக மருத்துவர்கள் பார்க்கிறார்கள். 

அப்பா முழுவதும் குணமடைய நீண்ட காலம் ஆகும். அதற்கான சிறப்பான முயற்சிகளை மருத்துவக்குழுவினர் எடுத்து வருகிறார்கள். நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அவர் முழுவதுமாக குணமடைந்து நம்மிடம் திரும்புவார். தற்போது அவர் முழு மயக்கத்தில் இல்லை. தன்னை சுற்றி இருப்பவர்களை அப்பாவால் அடையாளம் காண முடிகிறது. அவரால் சிறிது காலத்திற்குப் பேச முடியாது. ஆனால், விரைவில் பேசும் நிலைக்கு திரும்புவார்” என சரண் தெரிவித்துள்ளார்.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *