பீமா கோரேகான் வழக்கு: மோடி அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டதாக NIA திடுக்கிடும் தகவல்…

Spread the love


புதுடெல்லி: பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. தலித்-முஸ்லிம்களைக் தங்கள் அமைப்புகளில் இணைத்து, ஆயுதமேந்திய அமைப்பை உருவாக்கி வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற சதித்திட்டம் தீட்டப்படும் தகவல்கள்  என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

குற்றம் சாட்டப்பட்ட ரோனா வில்சனிடமிருந்து கிடைத்த ஆவணங்களிலிருந்து முக்கியமான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

வகுப்புவாதத்தை எதிர்ப்பது என்ற பெயரில் முகமூடி போட்டுக் கொண்டு, இந்த அமைப்புகள் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பில் மோடி அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக, தலித்துகளையும் முஸ்லிம்களையும் இணைத்து செயல்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சதித்திட்டத்தின் கீழ், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் பல தலித் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை, இந்து அமைப்புகளுக்கு எதிராக தலித்-முஸ்லிம்களைத் தூண்டிவிடும் சதியை மேற்கொண்டன. 

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு  
பீமா-கோரேகான் வழக்கில் கடந்த வாரம் ராஞ்சியில் இருந்து கைது செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி, மாவோயிச நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்டுகளிடமிருந்து எட்டு லட்சம் ரூபாய் வாங்கியிருப்பதாக, என்ஐஏ குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஆட்சேபனைக்குரிய ஆவணங்கள் ஸ்டானின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களிலிருந்து பல முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. சமிக்ஞை மொழி மற்றும் நகர்ப்புற கெரில்லா அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களும் கண்டெடுக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட ரோனா வில்சன் பற்றியும் என்ஐஏ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

Also Read | Pakistan ISI: இந்து தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் புதிய சதி அம்பலம்…

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு  

தமிழ்நாட்டில் தலித் அமைப்புகளுக்கு ஊக்கம் கொடுக்கப்படுவது குறித்தும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு சண்டை போடுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் தலித்துகளையும் முஸ்லிம்களையும் பயங்கரவாத அமைப்புகளிடம் ஈர்க்கும். ரோனா வில்சனிடம் இருந்து கிடைத்த ஆவணங்கள், பல பகுதிகளில் நக்சலைட்களின் தந்திர நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன. மோடி அரசுக்கு எதிராக தலித் மற்றும் முஸ்லீம்களை இணைத்து ‘படைகளை’ உருவாக்க ஸ்டான் சுவாமி சதி செய்ததாக என்.ஐ.ஏவின் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புடைய நவ்லகா

அது மட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்ட கெளதம் நவல்கா, அரசாங்கத்திற்கு எதிராக புத்திஜீவிகளை ஒன்றிணைத்ததாகவும்  தெரியவந்துள்ளது. நவ்லகா, 2010 முதல் 2011 வரை மூன்று முறை அமெரிக்காவிற்கு சென்றுவந்தார். பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்சில் (ஐ.எஸ்.ஐ) உறுப்பினராக இருக்கும் குலாம் நபி ஃபாயுடன் நவ்லகா தொடர்பு கொண்டிருந்தார், அவர் நவல்க்காவை ஐ.எஸ்.ஐயின் தலைவருக்கு அறிமுகப்படுத்தினார்.

மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது. அதில், குடிமையுரிமை செயற்பாட்டாளர்களான கௌதம் நவ்லகா, வெர்னான் கன்சால்வஸ், அருண் பெரைரா, கவிஞர் வரவர ராவ், மனித் உரிமை செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ் உள்ளிட்ட ஐந்து பேரை புனே காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் பிஜேபி கட்சிக்கு எதிராக சதி செய்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

Read Also | பலாத்காரம் செய்யபட்டு மயங்கிய நிலையில் 22 வயது பெண்ணின் உடல் மீட்பு..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *