புலியுடன் போராடி உயிர் தப்பித்த வீரர்; குலை நடுங்க வைக்கும் சம்பவங்கள்

Spread the love


புலி என்ற பெயரைக் கேட்டாலே படையும் நடுங்கும் இருப்பினும், புலியுடன் போராடி உயிர் பிழைத்த வெற்றிக் கதைகளும் உண்டு. குலை நடுங்க வைக்கும் சில சம்பவங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

பங்களாதேஷில் வசிக்கும் ஹஷ்மோத் அலி, 2016 ஆகஸ்டில் புலியால் தாக்கப்பட்டார், இதனால் அவரது முகம் முற்றிலுமாக  சிதைந்து போனது. காட்டிற்குள் பயணம் மேற்கொண்ட போது,  ஹஷ்மோத் அலி தனது படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​புலி வந்த அதன் நகங்களால் தாக்கியது. ஒரு பக்கம் முகத்தில் பாதியை கடித்து குதறி விட்டது. ஹஷ்மோத்தின் அலறல் சத்தம் கேட்டு, சுற்றியுள்ள மக்கள் வந்த பின் புலி தப்பி ஓடியது. காட்டில் இருந்து மருத்துவமனைக்கு ஹாஷ்மோத்தை அழைத்துச் செல்ல சுமார் ஆறு மணி நேரம் ஆனது, மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றினாலும், முகத்தை குணப்படுத்த முடியவில்லை. 

ALSO READ | Viral Video: விஜய் பாடலுக்கு நடனம் ஆடிய டேவிட் வார்னர்

2014 ஆம் ஆண்டில், பிரேசிலிய மிருகக்காட்சிசாலையில் 11 வயது சிறுவன் ஒரு தடைசெய்யப்பட்ட பகுதிக்குச் சென்றபோது புலியால் தாக்கப்பட்டான். புலி அவரைத் தாக்கியதில் சிறுவனின் கைகள் துண்டிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் உதவியுடன், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கையின் ஒரு பகுதியை துண்டிக்க வேண்டியிருந்தது.

ஜனவரி 2017 இல், சீனாவில் ஒரு மிருகக்காட்சிசாலையில் ஒரு சுற்றுலாப் பயணி மூன்று புலிகளால் தாக்கப்பட்டு அவரது மனைவி மற்றும் குழந்தையின் முன்னால் கொல்லப்பட்டார். மிருக காட்சி சாலையில் இருந்த 3 புலிகள் அவரைத் தாக்கியது. புலிகள் அவரது தலை மற்றும் கழுத்தை கடித்து குதறின. இதன் போது, ​​மிருகக்காட்சிசாலையின் காவலர்கள் பட்டாசுகளை பயன்படுத்தி புலிகளை விரட்டினார்கள். ஆனாலும் அவரை காப்பாற்றமுடியவில்லை.

2015 ஆம் ஆண்டு நவம்பரில், விவசாயி ஒருவர் இந்தியாவின் கார்பெட் அருகே உள்ள பரப்பூர் கிராமத்தில் தனது ஆடுகளை மேய்க்கச் சென்றபோது, ​​அவரை ஒரு புலி தாக்கியது. இதற்குப் பிறகு அந்த மனிதன் தனது ஈட்டியைப் வைத்து புலியுடன் சண்டையிட்டார். 30 நிமிட சண்டையில் அந்த நபர் பலத்த காயமடைந்ததோடு, ஒரு கை மற்றும் காலை இழந்தார். ஆனாலும் புலியை கொன்றார். 
  
ஜூலை 2020 இல், சூரிச் மிருகக்காட்சிசாலையில், ஒரு புலி சுற்றுலாப் பயணிகளின் முன்னால் ஒரு பெண்ணை  தாக்கி, குதறிக் கொன்றது. புலி தாக்குதலை கண்டு, பயந்த பார்வையாளர்கள் அலறினர்.   மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் வந்து சேர சுமார் எட்டு முதல் ஒன்பது நிமிடங்கள் ஆனது, அந்த நேரத்தில் புலி அந்தப் பெண்ணை கொன்று விட்டது. 

ALSO READ | ஓய்வுக்கு முற்றுபுள்ளி! கேப்டனாக தோனி தொடருவார் என CSK நிர்வாகம் அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *