பெங்களூர்-சோலாப்பூர் இடையில் முதல் RORO ரயில் சேவை தொடங்குகிறது..!!

Spread the love


பெங்களூரிலிருந்து சோலாப்பூர் செல்லும் முதல் ரோரோ (RORO) ரயிலை கர்நாடக முதல்வர் பி.எஸ்.யதியூரப்பா தொடக்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் அவருடன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் அங்கடி, மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா மற்றும் ரயில்வே மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

பெங்களூரு மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் இடையேயான முதல் ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ ‘Roll On Roll Off’  அதாவது ரோரோ (RORO) ரயில் சேவையை தொடக்கி வைக்கிறார், அதில் தட்டையாக உள்ள ரயில் பெட்டிகளில், சரக்குகள் உள்ள லாரிகள் ஏற்ற்படும். இந்த சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் என்று தென் மேற்கு ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.யெடியுரப்பா  புறநகர் பகுதியில் உள்ள நெலமகலா நிலையத்திலிருந்து ரோரோ ரயில் சேவையை தொடியசைத்து துவக்கி வைப்பார் என்று தென் மேற்கு ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Sep 1 முதல் தமிழகத்தில் பொது நூலகங்கள் திறக்கப்படும்: அரசாங்க உத்தரவு!!

அவருடன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் அங்கடி, மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா மற்றும் ரயில்வே மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

 “லாரிகளின் ஓட்டுநரும் துப்புரவாளரும் ரயிலின் தட்டையான பெட்டிகளில் ஏற்றப்பட்ட தங்கள் லாரிகளில் பயணம் செய்வார்கள், அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில்  லாரி, பெட்டியிலிருந்து இறக்கப்படும். பின்னர் ஓட்டுநர் அதனை அந்த இடத்திலிருந்து சாலை வழியாக ஓட்டிச் சென்று போக வேண்டிய இடத்தை அடைவார்கள்.”

சுமார் 682 கி.மீ தூரத்தை கடக்க இந்த ரயில் சேவையில் 17 மணி நேரம் ஆகும்.

இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 42 லாரிகளை எடுத்துச் செல்ல முடியும்.

இந்த ரயில் தர்மவரம், குண்டக்கல், ரைச்சூர் மற்றும் வாடி வழியாக மகாராஷ்டிராவின் சோலாப்பூர் அருகே பேலை சென்றடையும்.

ரோரோ சேவையினால், சாலையில் ஏற்படும் விபத்துக்கள் குறையும், பாதுகாப்பு மேம்படும். எரிபொருள் சேமிக்கப்படும் மற்றும் அந்நிய செலாவணியும் சேமிக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்கள், விரைவில் கெட்டுப் போகக்கூடிய பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் சிறிய அளவிலான சரக்குகளை விரைவாக கொண்டு செல்வதை இது உறுதி செய்கிறது.

இது பெரிய அளவிலான சரக்கு போக்குவரத்தை இது எளிதாக்குகிறது மற்றும் மாசுபாட்டைக் குறைக்கிறது, சாலை வழி போக்குவரத்தை விட, இதில் போக்குவரத்து செலவு குறைவாக உள்ளது.

மேலும் படிக்க | JEE, NEET 2020 தேர்வு உள்ள நிலையில் Unlock 4 தொடர்பான முக்கிய தகவல்கள்…!!!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *