பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதில் விரைவில் மாற்றம்: பிரதமர் மோடி

Spread the love


புதுடெல்லி: சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை திருத்துவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளின் காரணமாக, கல்வியில் சிறுமிகளின் மொத்த சேர்க்கை விகிதம் நாட்டில் முதன்முறையாக சிறுவர்களை விட அதிகமாக மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) 75 வது ஆண்டுவிழாவில் ரூ .75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிட்ட பின்னர் வீடியோ மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

“பெண்களுக்கு திருமணத்திற்கு ஏற்ற வயது எதுவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க குழு அமைக்கப்பட்டு, முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன” என்று பிரதமர் மோடி கூறினார். குழுவின் அறிக்கை குறித்தும், இது குறித்து அரசாங்கம் எப்போது முடிவெடுக்கும் என்று கேட்டும் நாடு முழுவதிலுமிருந்து பெண்களிடமிருந்து கடிதங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

“அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் விரைவில் தனது முடிவை எடுக்கும் என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், பெண்களுக்கான திருமணத்தின் குறைந்தபட்ச வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், இந்த விஷயத்தை ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

தற்போது, ​​திருமணத்தின் குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 18 வயதாகவும் ஆண்களுக்கு 21 வயதாகவும் இருக்கிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக போராட தனது அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் மோடி (PM Modi) எடுத்துரைத்தார்.

ALSO READ: Jal Jeevan Mission: மத்திய பிரதேசத்திற்கு மத்திய அரசிடம் இருந்து 1,280 கோடி ரூபாய்….

ஊட்டச்சத்து குறைபாட்டின் சவாலை சமாளிக்க ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான அணுகுமுறையை தனது அரசாங்கம் எடுத்துள்ளது என்று பிரதமர் கூறினார். அதிக ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமான அனைத்து காரணிகளையும் சரி செய்ய அரசாங்கம் பல பரிமாண செயலுத்தியை பின்பற்றியுள்ளது, என்றார் பிரதமர்.

அரசாங்கம் தேசிய ஊட்டச்சத்து மிஷனைத் தொடங்கியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மற்ற சாதனைகளை எடுத்துரைத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் (Swachh Bharat Mission) கீழ் நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகளை அரசாங்கம் கட்டியுள்ளதாகவும், குழாய் குடிநீர் வழங்க ஜல் ஜீவன் மிஷனைத் (Jal Jeevan Mission) தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஏழை பெண்களுக்கு 1 ரூபாயில் சேனிடரி பேடுகளை அரசாங்கம் வழங்கி வருகிறது என்றார் பிரதமர் மோடி.

“இந்த முயற்சிகள் காரணமாக, முதன்முறையாக, கல்வியில் சிறுமிகளின் மொத்த சேர்க்கை விகிதம் சிறுவர்களை விட அதிகமாக உள்ளது” என்தையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

ALSO READ: குழந்தைகளுக்கான STARS திட்டத்திற்கு மோடி அரசு ஒப்புதல்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *