பென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்…மாதம் ₹14,000 பென்ஷன் பெற வழி இருக்கு..!!!

Spread the love


பென்ஷன் (Pension) இருந்தால், வருமானத்திற்கு எவரையும் சாராமல், பிரச்சனை ஏதுமின்றி, வாழ்க்கையை சிக்கலின்றி அனுபவிக்கலாம். நம்மை கவனித்துக் கொள்ள குழந்தைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சொந்த காலில் நிற்பது நமக்கு ஆன்ம பலத்தை கொடுக்கிறது.

அந்த வகையில், நடுத்தர வர்க்கத்தினர், குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

நடுத்தர மக்களின் இந்த நிலையை கருத்தில் கொண்டு எல்.ஐ.சி  LIC சிறந்த ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனம், அதாவது LIC, நாட்டின் மிகவும் நம்பகமான காப்பீட்டு நிறுவனமாக கருதப்படுகிறது. அரசின் கட்டுபாட்டில் இருப்பதால், இதில் ஆபத்துக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. மேலும் அரசால் நடத்தப்படும் இந்த காப்பிட்டு நிறுவனம், மக்கள் மனதில் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக உள்ளது என்பதில் மாற்றும் கருத்து இல்லை.

ஓய்வூதியம் தொடர்பாக மக்களின் மனதில் பெரும்பாலும் பல கேள்விகள் மற்றும் சந்தேகம்  நிலவுகிறது. இந்த பதற்றம்  ஓய்வு  பெறப்போகும் நிலையில் உள்லவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும். எல்.ஐ.சி மக்களின் தேவைகளை மனதில் கொண்டு ‘ஜீவன் அக்‌ஷய்’ (Jeevan Akshay) பாலிஸியை வழங்குகிறது. இந்தக் பாலிஸியின் கீழ், பாலிசிதாரருக்கு அவர்கள் செய்யும்  முதலீட்டிற்கு,  வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்.

மேலும் படிக்க | ஸ்கூட்டர் வாங்க ஆசையா?… பெண்களுக்கான சிறப்பு சலுகையை அறிவித்த PNB!!

இந்தக் பாலிஸியை எடுக்க குறைந்தபட்சம் ரூ.1,00,000 முதலீடு செய்ய வேண்டும். 30 முதல் 85 வயது வரை உள்ளவர்கள் இதில் முதலீடு செய்ய தகுதியுடையவர்கள். பாலிசியை எடுக்க எந்த மருத்துவ சான்றிதழும் தேவையில்லை. பாலிசிதாரர் தனக்கு ஏற்ற வகையில் பென்ஷன் வகையை தேர்வு செய்ய 10 ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த பாலிஸியில் மொத்தமாக முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 14 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறலாம். இந்தக் பாலிஸியின் கீழ், நீங்கள் உடனடியாக ஓய்வூதியம் பெற விரும்பினால் அதற்கு ஏற்ற வகையில் பாலிஸி வகையை தேர்வு செய்யலாம்.  ஒரு நபர் ஒவ்வொரு மாதமும் 14 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற விரும்பினால், அவர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வயது: 36
காப்பீட்டு தொகை: 30,00,000
மொத்த பிரீமியம்: 30,54,000

ஓய்வூதியம் (பென்ஷன்):
ஆண்டுதோறும்: 1,80,000
அரை ஆண்டு: 88,500
காலாண்டு: 43,913
மாதம்: 14,550

மேலும் படிக்க | ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் செப்.30… இணைக்கும் வழிமுறை என்ன..!!!

இதன் மூலம் பாலிஸி தாரருக்கு மாதத்திற்கு ரூ.14550 ஓய்வூதியம் கிடைக்கும். பாலிசிதாரர் உயிர்வாழும் வரை இந்த ஓய்வூதியம் கிடைக்கும். 

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *