
பொது தளத்தில் ஒவ்வோரு இந்தியருக்கும் கருத்துரிமை உண்டு : ரவி சங்கர் பிரசாத்
முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களை பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் கட்டுப்படுத்துவதாக ராகுல் காந்தி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒவ்வொரு இந்தியருக்கும் பொது தளத்தில் தனது கருத்தை வெளியிட உரிமை உண்டு எனக் கூறினார்.
எந்த சமூக தளம் என நான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், பொது தளம் என்று இருக்கும் போது, அதில தனது கருத்துக்களை வெளியிட ஒவ்வோரு இந்தியருக்கும் உரிமை உண்டு எனத் தெரிவித்தார். நாடாளுமன்ற கமிட்டி குறித்தும் தான் கருத்து ஏதும் கூற விரும்பவில்லை எனக் கூறினார்.
அவர் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசினார்.
“ராகுல் காந்தியின் ட்வீட்டிற்கு பதிலளித்து விட்டேன். 2019 தேர்தலின் போது முகநூல் நிறுவனத்தினால் தேசியவாத கருத்துக்ளை தெரிவித்த 700 பக்கங்கள் நீக்கப்பட்டது குறித்த விபரத்தை பாஜக தொழில்நுட்ப பிரிவு ஏற்கனவே அளித்துள்ளது. நாட்டில் அரசியல் ரீதியாக தோற்று போன கட்சிகள், இது போன்று சமூக தளங்களிலாவது ஆட்சி செய்ய வேண்டும் என நினைக்கிறார்களா. அது தான் உண்மை நிலையா?” என ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
மேலும் படிக்க | மும்பையில் லால்பாக்சா ராஜா இல்லாத விநாயகர் சதுர்த்தி… 86 ஆண்டுகளில் முதல் முறை..!!!
காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி, இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே, வெறுப்பு பேச்சுக்களின் ஈடுபட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.
நாட்டில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை கம்பினால் அடிப்போம் என கூறுவது வெறுப்பு பேச்சு இல்லையா என்றும், இதெல்லாம் வன்முறையை தூண்டும் பேச்சுக்கள் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகள் என்றார்.
ரவிசங்கர் பிரசாத், இரண்டு நாட்களுக்கு முன் பேசிய போது கூட, மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்துள்ள நிலையில் மக்களிடம் மட்டுமல்லாமல் சொந்த கட்சியினரிடம் தோற்றுப் போனதால், விரக்தியில் , மொத்த உலகத்தையுமே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தான் கட்டுப்படுத்தப்படுத்துகிறது என பொய்யான குற்றசாட்டுகளை மனம் போன போக்கில் அள்ளி விடுகிறார்கல் என சாடினார்.
தேர்தலுக்கும் முன்னால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் பேஸ்புக் உடன் கூட்டணி வைத்து அதன் தரவை பயன்படுத்தி விவகாரத்தில் சிக்கிய காங்கிரஸ் கட்சிக்கு, பாஜகவை கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
ALSO RAD | குளிரில் உறையப்போகும் லடாக்.. இனியாவது எல்லையில் தொல்லைகள் தீருமா..!!