மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு..!!!

Spread the love


கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம் அதாவது லைசன்ஸ் போன்ற மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டெம்பர் 30ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அதை மேலும் மூன்று மாதங்களுக்கு, டிசமபர் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இந்த தகவலை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெஞ்சாலைத்துறை வெளியிட்டது.

அரசு மூன்றாவது முறையாக இந்த கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. 

முதலில் மார்ச் மாதம் 30ம் தேதியும் பின்னர் ஜூன் மாதம் 9ம் தேதியும் இதே போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

“மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 ஆகியவற்றின் கீழ் ஃபிட்னஸ், பர்மிட்டுகள், உரிமங்கள், லைசன்சுகள், பதிவுகள் அல்லது பிற ஆவணங்கள் செல்லுபடியாகும் தேதியை, 2020 டிசம்பர் 31 வரை நீட்டிக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது” என்று அமைச்சக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் படிக்க | Unlock 4: மெட்ரோ ரயில், சினிமா அரங்குகள், பள்ளிகள் நிலை என்ன..!!

பிப்ரவரி மாதம் தேதியிலிருந்து கலாவதி ஆகக்கூடிய  மோடார் வாகன ஆவணக்கள் அனைத்தும், டிசம்பர் 31ம் தேதி வரை செல்லுபடியாகும்.

கொரோனா பரவல் காரணமாக, ஆவணங்களை புதுப்பிப்பதில் மக்கள் எதிர்க் கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
                         
மேலும் படிக்க | ஆதார் அட்டையை பயன்படுத்தி ஜிஎஸ்டி எப்படி பதிவு செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *