ராஜஸ்தானில், கோயில் நில ஆக்கிரமிப்பை எதிர்த்த பூசாரி உயிருடன் எரித்து கொலை..!!!

Spread the love


ராஜஸ்தானில்  கோவில் நில ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்ட கோயில்  பூசாரி, உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்.சபோத்ராவில் உள்ள புக்னா கிராமத்தில், கோவில் பூசாரியை 6 பேர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர்.

ஜெய்ப்பூர் (Jaipur) : அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில், 50 வயது கோயில் பூசாரி ஒருவருக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க, நில மாஃபியா கும்பல் மேற்கொண்ட முயற்சியை பூசாரி எதிர்த்ததாக கூறப்படுகிறது.

பூசாரி, பாபுலால் வைஷ்ணவ், தனது வாக்குமூலத்தில், அவரும் அவரது குடும்பத்தினரும் கிராமத்தில் உள்ள ஒரு ராதா கிருஷ்ணா கோயிலை கவனித்து வருவதாகவும், கோயிலின் பெயரில் ஒதுக்கப்பட்ட நிலத்தை விவசாயத்திற்காகப் பயன்படுத்தி வந்ததாகவும் கூறினார்.

வியாழக்கிழமை, காலை 10 மணியளவில், குற்றம் சாட்டப்பட்ட கைலாஷ் ஒரு சிலருடன் வந்து நிலத்தில் தகரக் கொட்டகைகளை போடத் தொடங்கினார். வைஷ்ணவ் எதிர்த்தபோது, ​​அவர்கள் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். ஆபத்தான நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார், அங்கு அவர் வியாழக்கிழமை இரவு  சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ALSO READ | அட…. ஒரு நாள் CM மாதிரி, ஒரு நாள் PM.. எந்த நாட்டில தெரியுமா..!!!

குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, எஸ்.பி. தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கபட்டு, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இருவர்  கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, கரவுலி,  பகுதி காவல் துறை கண்காணிப்பாளர், மிருதுல் கச்சவா பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.

வைஷ்ணவின் குடும்ப உறுப்பினர்கள் SHO மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயர் நிலை விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்றும், குடும்ப உறுப்பினருக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை தர வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே, மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அசோக் கெஹ்லோட் அரசை தாக்கி, இந்த சம்பவத்தை கடுமையாக கண்டனம் செய்துள்ளார்.

“கரவுலி மாவட்டத்தின் சபோத்ராவில் பூசாரி ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைப் பார்க்கும்போது, ​​தலித், பெண்கள், வர்த்தகர்கள், குழந்தைகள், என யாரும் பாதுகாப்பாக இல்லை என்பது தெளிவாகிறது. மாநில அரசு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எழுந்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும், “என்று அவர் கூறினார்.

மாநில காங்கிரஸ் அரசாங்கம் அதன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் “என்று ராஜே ட்வீட் செய்துள்ளார்.

ALSO READ | UP-யில் பகீர் சம்பவம்: மனைவியின் தலையை துண்டித்து காவல் நிலையம் எடுத்து சென்ற கணவன்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYe

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *