வீரதீர சாகச விருதுகள் 2020: Lt Col. கிரிஷன் சிங் ராவத்துக்கு ஷவுரியா சக்ரா விருது

Spread the love


2020 ஆம் ஆண்டிற்கான வீரதீர சாகச விருதுகள் அறிவிக்கப்பட்டது. Lt Col. கிரிஷன் சிங் ராவத்துக்கு ஷவுரியா சக்ரா விருது, 60 ராணுவ வீரர்களுக்கு சேனா பதக்கம் அளித்து கவுரவிக்கப்பட உள்ளது.

 

புதுடெல்லி: 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலான வீரர்களை கவுரவிப்பதற்காக ஷவுரியா சக்ரா உள்ளிட்ட வீர சாகசத்திற்கான விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இராணுவத்தைச் சேர்ந்த, எலைட் சிறப்பு படையின் லெப்டிணண்ட் ஜெனரல்,கிரிஷன் சிங் ராவத், மேஜர் அனில் உர்ஸ் மற்றும்  ஹவில்தார் அலோக் குமார் துபே ஆகியோருக்கு ஷவுரியா சக்ரா விருது வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | 74வது சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

தவிர, 60 ராணுவ வீரர்களுக்கு, துணிச்சலுக்கான சேனா பதக்கம் வழங்கப்பட்டது., கடற்படையை சேர்ந்த நான்கு பேருக்கு நாவோ சேனா பதக்கம் மற்றும் விமானப்படைக்கு ஐந்து வாயு சேனா பதக்கம் வழங்க குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். ‘ஆபரேஷன் மேக்தூட்’ மற்றும் ‘ஆபரேஷன் ரக்ஷக்’ ஆகியவற்றரில் வீர மரணம் அடைந்த 19 பேருக்கு அவர்களது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக விருது வழங்கவும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சியாச்சின் பனிப்பாறையின் மிக உயர்ந்த பகுதிகளின் கட்டுப்பட்டை பெறுவதற்காக 1984 ஆம் ஆண்டில் ஆபரேஷன் மேக்தூட் தொடங்கப்பட்டது. இது நவீன இராணுவ வரலாற்றில் மிக நீண்ட ராணுவ நடவடிக்கையாகும். ‘ஆபரேஷன் ரக்ஷக்’ என்பது ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் ஊருவலை முறியயடிப்பதற்கான  நடவடிக்கையாகும்.

மேலும் படிக்க | சுதந்திர தின வரலாற்றில் முதல் முறையாக நயாகரா நீர்வீழ்ச்சியில் மூவர்ண கொடி பறக்கும்..!!!

வீர தீர சாகச விருதுகளை பெரும் வீரர்களின் முழு பட்டியல் இதோ…

 

Gallantry awards list 2

Gallantry awards list 3

 

Gallantry awards list 4

 

 

 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *