ஹெலிகாப்டர் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

Spread the love


பாட்னா: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சனிக்கிழமையன்று விபத்து ஒன்றில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். அவர் சென்ற ஹெலிகாப்டர் பாட்னா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையில் இருந்த முட்கம்பியில் மோதியது. இதனால் அவரது ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டிருந்த பிளேடுகள் (blades) உடைந்தன.  

கிடைத்த தகவல்களின்படி, ரவிசங்கர் பிரசாத் சனிக்கிழமை மாலை பீகாரின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து பாட்னாவுக்கு திரும்பினார். அவருடன் ஹெலிகாப்டரில், மங்கல் பாண்டே மற்றும் சஞ்சய் ஜா ஆகியோரும் இருந்தனர். ஹெலிகாப்டர் தரை இறங்கும் போது, ​​ அருகிலுள்ள கட்டுமான தளத்தின் மேல்நிலையில் செய்யப்பட்டிருந்த வயரிங் மீது உரசியது.

இந்த சம்பவத்தில், ஹெலிகாப்டரின் நான்கு bladeகளும் உடைந்தன.ரவிசங்கர் பிரசாத் மற்றும் அவருடன் இருந்த பிற தலைவர்களளும் இந்த விபத்தில் இருந்து தப்பினர். இந்த சம்பவத்திற்கு பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து மூன்று தலைவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கிடைத்திருக்கும் உடனடி தகவல்களின்படி, அனைத்து தலைவர்களும் பாதுகாப்பாக உள்ளனர், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

Read Also | ஆண் குழந்தையே வேண்டும் என்பது குறுகிய பார்வை: அடித்து தூள் கிளப்பும் அனுஷ்கா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *