1 hour-க்குள் 33 dishes செய்து 10 வயது கேரளப் பெண் செய்த சுவையான சாதனை!!

Spread the love


புதுடெல்லி: COVID-19 லாக்டௌனை இந்திய குழந்தைகள் மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறார்கள். பலர் பல புதுமையான விஷயங்களைச் செய்து சாதனைகள் பலவற்றை முறியடித்து சாதனைகளுக்கான பதிவு புத்தகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்கிறார்கள்.

இப்போது, ​​கேரளாவில் (Kerala) ஒரு 10 வயது சிறுமி ஒரு சுவையான சாதனையை (Record) செய்துள்ளார். ஆம்! சுவையான சாதனைதான். அவர் செய்த சாதனையைப் பற்றி கேட்டால் மனமும் வயிறும் நிரம்பும். அவர் சோளப் பஜ்ஜி, ஊத்தபம், ஃப்ரைட் ரைஸ், சிக்கன் ரோஸ்ட் உள்ளிட்ட 33 ருசியான உணவுப் பண்டங்களை ஒரு மணி நேரத்திற்குள் தயார் செய்து சாதனை படைத்துள்ளார்!

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் பிரஜித் பாபு மற்றும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மன்சிமா ஆகியோரின் மகள் சான்வி எம் பிரஜித், ஒரு குழந்தையால் தயார் செய்யப்பட்ட அதிகபட்ச உணவு வகைகளுக்கான சாதனை படைத்து ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி, சான்வி 33 உணவுப் பண்டங்களை சமைத்தார். இதில் இட்லி, வேஃபிள், சோள ஃப்ரிட்டர்ஸ், காளான் டிக்கா, ஊத்தப்பம், பனீர் டிக்கா, முட்டை புல்ஸ் ஐ, சேண்ட்விச், பாப்டி சாட், ஃப்ரைட் ரைஸ், சிக்கன் ரோஸ்ட், பேன்கேக், அப்பம் மற்றும் இன்னும் பல பதார்த்தங்களும் அடங்கும்.

ALSO READ: WATCH: இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த இளைஞரின் புதுவித முக கவசம்..!

அவரது விசாகப்பட்டினம் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சமையல் நிகழ்வை “ஆசியா புக் ஆப் ரெகார்ட்ஸ்” அதிகாரிகள் ஆன்லைனில் பார்த்தார்கள். அதுதவிர, இரண்டு கெஜட் அதிகாரிகள் சான்வி ஒரு மணி நேரத்தில் 33 பண்டங்களை சமைத்ததற்கு சாட்சியாக இருந்தனர்.” என்று அவரது தாயார் மன்ஜிமா பி.டி.ஐ.-யிடம் தெரிவித்தார்.

ஒரு நட்சத்திர குக்காகவும் ரியாலிட்டி குக்கரி ஷோ இறுதிப் போட்டியாளராகவும் பெயர் எடுத்த தனது தாயால் சமையலில் ஈர்க்கப்பட்டதாக சான்வி கூறினார். சான்வியும் குழந்தைகளுக்கான சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் ஏற்கனவே ஒரு YouTube சேனலில் (YouTube Channel) எளிமையான மற்றும் சுவையான உணவுகளை சமைப்பதைப் பற்றி அவர் வீடியோக்களை போஸ்ட் செய்து வருகிறார்.

​​சான்வி ஒரு குழந்தையாக இருந்தபோது, எப்போதுமே சமையலில் ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் தனது தாய் மற்றும் தாத்தா பாட்டியுடன் இணைந்து மிகச் சிறிய வயதுலிருந்தே சமையல் செய்யத் துவங்கினார் என்றும் மன்ஜிமா கூறினார். 

ALSO READ: 10 ஆண்டுகளில் 10 குழந்தைகள்: இன்னும் 2 வேண்டும் என்னும் US பெண்மணி!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *