12,638 வைரங்களைக் கொண்டு வைர மோதிரத்தை வடிவமைத்து Guinness சாதனை செய்த இந்தியர்

Spread the love


புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த 25 வயதான நகைக்கடை வியாபாரி, ஒரே மோதிரத்தில் அதிக எண்ணிக்கையிலான வைரங்களை பதித்து கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற்றுள்ளார். “The Marigold-The Ring of Prosperity” என்று அழைக்கப்படும் மலர் வடிவ மோதிரம் 12,638 வைரங்களுடன் (38.08 காரட்) பொறிக்கப்பட்டுள்ளது. இது 165 கிராம் (5.8 அவுன்ஸ்) எடையைக் கொண்டுள்ளது.

இருப்பினும், இதை உருவாக்கியுள்ள நகைக்கடை விற்பனையாளர் ஹர்ஷித் பன்சல், இப்போதைக்கு கின்னஸ் சாதனை படைத்த இந்த மோதிரத்தை விற்பதாக இல்லை என்று கூறியுள்ளார்.

ஏ.எஃப்.பி அறிக்கையின்படி, வடிவமைப்பாளர் தனது நேர்த்தியான இந்த படைப்பை ஒரு கனவுத் திட்டம் என்று விவரித்தார். “இது எளிதாக, வசதியாக அணியக்கூடியது” என்று அவர் கூறினார். இந்தியாவின் (India) வைர மையமான சூரத்தில் நகை வடிவமைப்பு வகுப்பில் படிக்கும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு இந்த யோசனை வந்ததாக அவர் கூறினார்.