‘130 கோடி மக்கள் வாழும் நாடு யாருக்கும் தலைவணங்காது’: சீனாவுக்கு Amit Shah-வின் அதிரடி பதில்!!

Spread the love


லடாக்கில் LAC- ல் இந்தியாவுடன் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் விடுதலை இராணுவ (PLA) துருப்புக்களை போருக்குத் தயாராகுமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்ட சில நாட்களுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை (அக்டோபர் 17) சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் எப்போதும் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், அமித் ஷா (Amit Shah) இந்தியா ஒருபோதும், ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனாவுக்குக் கொடுக்காது என்ற கருத்தை வலியுறுத்தினார். “எந்த ஒரு நாடும் எப்போதும் போருக்கு தயாராகத்தான் இருக்கும். படைகளை பராமரிப்பதன் நோக்கம் இதுதான் – எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலளிக்க வேண்டும் என்பதே இதன் பின்னால் உள்ள கருத்து.

எந்தவொரு குறிப்பிட்ட விஷயத்தையும் குறிப்பிடுவதற்காக நான் இதைச் சொல்லவில்லை. ஆனால் இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் எப்போதும் தயாராக உள்ளன என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

ALSO READ: ‘நெருப்போடு விளையாடாதீர்கள்’ எச்சரித்த சீனா: ‘இது துவக்கம்தான், Wait and Watch’ என பதிலளித்த இந்தியா!!

எனினும், LAC நெருக்கடியைத் தீர்க்க இரு நாடுகளிலிருந்தும் மூத்த இராணுவ அதிகாரிகள் ஒருவருக்கொருவர் தொடர்பில் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். “நாட்டின் உள்துறை அமைச்சராக இதைப் பற்றி கருத்து தெரிவிப்பது பொருத்தமானதாக இருக்காது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) வார்த்தைகளை மீண்டும் நான் கூறுகிறேன். நாம் முழு எச்சரிக்கையுடன் இருக்கிறோம். யாரும் நமது பிரதேசத்திலிருந்து ஒரு அங்குலத்தைக் கூட எடுத்துக்கொள்ள முடியாது” என்று அவர் கூறினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) சமீபத்தில் PLA துருப்புக்களை “போருக்கு தயாராவதில் மனதையும் சக்தியையும் ஈடுபடுத்துமாறு” கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

லடாக் மற்றும் அருணாசல பிரதேசத்தில் சீனா தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையில், சீனாவுக்கு சரியான பதிலைக் கொடுக்க, இந்தியா திபெத் மற்றும் தைவானுக்கான வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்று கேட்கப்பட்டதற்கு, ஷா, “இதைப் பற்றி இங்கு விவாதிப்பது சரியல்ல. இது தொலைநோக்கு தாக்கங்களுடைய மிகவும் சிக்கலான பிரச்சினை. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை விவரித்துள்ளனர். அது போதும் என்று நினைக்கிறேன். சீனாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது… ” என்று கூறினார்.

உலகளாவிய சமூகம், எல்லைகளை பாதுகாக்கும் முயற்சிகளில் இந்தியாவுடன் இணைந்து நிற்கிறது என்றும் ஷா கூறினார். “நமது நோக்கங்கள் உன்னதமானவை, வலிமையானவை. 130 கோடி மக்கள் வாழும் நாடு யாருக்கும் தலைவணங்காது. நாம் சரியானவற்றை செய்கிறோம். நாம் பெரும்பாலான நாடுகளின் ஆதரவைக் கொண்டிருக்கிறோம்” என்றும் அமித் ஷா தெரிவித்தார். 

ALSO READ: ‘Get lost’ என்று கூறி, இந்திய ஊடகங்களுக்கு போதித்த சீனாவுக்கு பதிலளித்த Taiwan

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *