2021 முதல் அனைத்து இந்தியர்களுக்கும் E-Passport-களை வழங்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம்

Spread the love


2021 ஆம் ஆண்டில் நீங்கள் ஒரு புதிய பாஸ்போர்ட் அல்லது உங்கள் பாஸ்போர்ட்டின் மறு வெளியீட்டிற்கு விண்ணப்பித்தால், உங்களுக்கு நுண்செயலி சில்லுடன் (microprocessor) பொருத்தப்பட்ட ஒரு E-Passport கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக, சோதனை அடிப்படையில், இப்படிப்பட்ட சிப்சுகள் பொருத்தப்பட்ட முதல் 20,000 உத்தியோகபூர்வ அரசியல் ரீதியான ஈ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன.  

இப்போது அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஈ-பாஸ்போர்ட்களை வழங்குவதற்கான அதே செயல்முறையைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாடு தழுவிய திட்டத்தை முன்னெடுப்பதற்கான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் தீர்வை அமைக்கும் ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இதன் மூலம் போலி பாஸ்போர்ட்களை உருவாக்குவது கடினமாகிவிடும். மேலும் இது சர்வதேச பயணிகளுக்கு விரைவாக இடம்பெயர அனுமதிக்கும்.

தற்போது, ​​குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்டுகள், மற்ற நாடுகளில் உள்ளதைப் போல புத்தகங்களில் அச்சிடப்பட்டு அளிக்கப்படுகின்றன.  தனிப்பயனாக்கப்பட்ட ஈ-பாஸ்போர்ட்களை தயாரிப்பதற்காக ஏஜென்சி ஒரு பிரத்யேகப் பிரிவை அமைக்கும். இந்த செயல்முறை ஒரு மணி நேரத்திற்கு 10,000 முதல் 20,000 ஈ-பாஸ்போர்ட்களை வழங்கும். இப்பணிகளைச் செயல்படுத்த டெல்லி மற்றும் சென்னையில் இதற்கான ஐடி அமைப்புகள் அமைக்கப்படும்.

ALSO READ: H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம்: US

தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை அமைப்பதற்கான ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும், பாஸ்போர்ட்களை மின் முறையில் தனிப்பயனாக்குவதற்கான தீர்வைக் கொண்டு வரவும் ஒரு ஏஜன்சியை அமைக்க, தேசிய தகவல் மையமும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து ஒரு கோரிக்கையை வெளியிட்டுள்ளன. முன்னர், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் (MEA) CPV பிரிவிலிருந்து மட்டும், அரசியல் ரீதியான மற்றும் உத்தியோகபூர்வ பாஸ்போர்ட்டுகளுக்காக இப்படிப்பட்ட ஈ-பாஸ்போர்டுகள் வழங்கப்பட்டன.

எனினும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், நாட்டின் அனைத்து 36 பாஸ்போர்ட் அலுவலகங்களும் ஈ-பாஸ்போர்டுகளை வழங்க முடியும்.  

ALSO READ: ஆயுஷ்மான் பாரத்: ஏழைகளுக்கு மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்துக்கும் ஆபத்பாந்தவன் தான்..!!

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *