2030-க்குள் நாட்டில் 68 லட்சம் பெண் குழந்தைகள் கொல்லப்படுவார்கள்: அறிக்கை

Spread the love


புது டெல்லி: 2017 முதல் 2030 வரை, இந்தியாவில் சுமார் 68 லட்ச பெண் குழந்தைகள் குறைவாக பிறப்பார்கள். சவூதி அரேபியாவில் (Saudi Arabia) உள்ள கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பாலினத்தை அறிந்த பிறகு, வயிற்றில் இருக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அது கருக்கலைப்பு (Abortion) செய்யப்படுகிறது என்பதே 68 லட்ச பெண் குழந்தைகள் குறைவாக பிறப்பார்கள் என்பதற்கான பின்னணியில் கூறப்பட்டுள்ளது.

Theguardian.com இல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2017 முதல் 2030 வரை, உத்தரப்பிரதேசத்தில் (Uttar Pradesh) 20 லட்சம் குறைவான பெண்கள் பிறப்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது, இந்தியாவில் மிகவும் குறைவாக பெண் குழந்தைகள் பெற்றெடுப்பது இந்த மாநிலத்தை குறிக்கிறது. நாட்டில் பெண்கள் கருவுறுதல் விகிதம் மற்றும் ஒரு மகன் அல்லது மகள் வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மதிப்பீடு செய்துள்ளனர்.

ALSO REASD | இந்து பெண்ணை எந்த கையாவது தொட்டால், அந்த கை இருக்காது: அனந்த்குமார் ஹெக்டே

இந்தியாவின் வடக்கில் அமைந்துள்ள 17 மாநிலங்களில், ஒரு மகனுக்கான ஆசை மிக அதிகமாக இருப்பதைக் காண முடிந்தது. இந்த வாரம் Plos One இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்திற்கான (Gender Equality) கடுமையான கொள்கையை இந்தியா செயல்படுத்த வேண்டும் என்றும் ஆய்வு கூறுகிறது.

1994 இல், வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்துக்கொள்வது சட்டவிரோதமானத என இந்தியாவில் சட்டங்கள் உருவாக்கப்பட்டது. இருப்பினும், இந்த சட்டத்தை வெவ்வேறு பகுதிகளில் செயல்படுத்துவதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாலின விகிதம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. தற்போது, ​​இந்தியாவில் ஆயிரம் ஆண்களுக்கு 900 முதல் 930 பெண்கள் உள்ளனர்.

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *