2050 க்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்: ஆய்வு

Spread the love


புது தில்லி: 2050ம் ஆண்டில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது

2030 க்குள், இந்தியா நான்காவது பெரிய பொருளாதாரமாக வெற்றி நடை போடும். அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக இந்தியா இருக்கும் என லான்சென்ட் மெடிக்கல் ஜர்னலின்  (Lancent Medical Journal) ஆய்வு  தெரிக்கிறது. 

இந்த இதழில், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உழைக்கும் மக்கள் தொகை குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில், இந்தியா உலகின் ஏழாவது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில்,  2030 ஆண்டு வாக்கில் இந்தியா நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறியது.

2030 ஆம் ஆண்டில், இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக இந்தியா இருக்கும். தற்போது, ​​இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகும். பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன.

ALSO READ | மலிவான விலையில் தங்கத்தை வாங்கும் பொன்னான வாய்ப்பை வழங்கும் மத்திய அரசு..!!!

மத்திய அரசின் மதிப்பீடும்  இதே தகவலை அளிக்கிறது நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார், இந்த ஆண்டு மே மாதம் வெளியிட்ட அறிக்கையில், 2047 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறினார். 

கடந்த ஆண்டு டிசம்பரில், ஜப்பானின் பொருளாதார ஆராய்ச்சி மையம்  (Center for Economic Research, Japan)  தனது ஒரு ஆராய்ச்சியில் 2029 ஆம் ஆண்டில் இந்தியா ஜப்பானை முந்திக்கொண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறியது. ஜப்பானின் இந்த மதிப்பீடு கொரோனா வைரஸ் பரவலுக்கு முந்தைய மதிப்பீடு ஆகும். தற்போதைய தொற்றுநோய் காரணமாக, 2025 வாக்கில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கு சிறிது தாமதமாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவிலும் இந்தியாவிலும் உழைக்கும் மக்கள்தொகையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் லான்செட் பத்திரிகை எச்சரித்தது. இந்த நேரத்தில், நைஜீரியாவில் உழைக்கும் மக்கள் தொகை அதிகரிக்கும். இருப்பினும், உழைக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா முதலிடத்திலேயே இருக்கும். 2100 வரை இந்தியா உலகளவில் மிகப்பெரிய உழைக்கும் மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று அது கூறியது. இந்தியாவை அடுத்து நைஜீரியா, சீனா மற்றும் அமெரிக்கா இருக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | Loan Moratorium: நீதிமன்றம் அரசின் நிதிக் கொள்கையில் தலையிட இயலாது-மத்திய அரசு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYe

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *