Breaking: தற்காலிகமாக நிறுத்தப்பட்டது IPL, பல அணிகளில் பரவியது தொற்று

Spread the love


IPL 2021 Latest Update: 2021 ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அணிகளின் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தேதி அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

அடுத்தடுத்த வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல். அணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து கவலை தெரிவிப்பதால் ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு என  தகவல் வந்துள்ளது. இந்த தகவலை பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா உறுதிபடுத்தியுள்ளார். 

இந்தியன் பிரீமியர் லீக்கின் நிர்வாகம், தொற்று பரவாமல் தடுக்க, போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் அனைத்து உருப்பினர்களையும் பயோ பபிள் என்ற பாதுகாக்கப்பட்ட வட்டத்திற்குள் வைத்திருந்தது. எனினும், இந்த பாதுகாப்புக்குக் கிடைத்துள்ள பெரிய அடியாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இரு வீரர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

கொல்கத்தா வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே CSK பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸின் உறுப்பினர்கள் சிலருக்கு தொற்று உறுதியானது. இதனால், IPL நிர்வாகத்தின் பிரச்சனை அதிகரித்தது. 

ALSO READ: IPL 2021, CSK vs RR போட்டி நடக்காதா? CSK அணியில் யாருக்கு தொற்று? விவரம் உள்ளே

இதன் பிறகு CSK அணியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என நம்பப்படுகின்றது.  இதுமட்டுமின்றி, வ்ரிதிமன் சாஹாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னதாக, ஊடக அறிக்கையின் படி, CSK உரிமையாளர்கள், தங்களது அடுத்த ஆட்டத்தை தாங்கள் ஆட விரும்பவில்லை என BCCI-க்கு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனைத்து வீரர்களும் 6 நாட்களில் மூன்று கொரோனா சோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவுடன்தான் போட்டிகளில் ஆட முடியும் என அணி கருதுவதாகக் கூறப்படுகிறது. 

“பயிற்சியாளருக்கு அறிகுறிகள் இல்லை. இருப்பினும், பி.சி.சி.ஐயின் கோவிட் நெறிமுறைகளின்படி, அவருடன் தொடர்பு கொண்ட ஒவ்வொருவரும் ஆறு நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருக்கும். ஆகையால் எங்கள் அடுத்த ஆட்டத்தை (ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக) விளையாட முடியாது. சோதனை நெறிமுறைகளைப் பற்றி பி.சி.சி.ஐக்குத் தெரியும். தொடர்பில் வந்த அனைவருக்கும் எத்தனை முறை சோதனை நடத்தப்பட வேண்டும் என்பது தெளிவாக உள்ளது. நாங்கள் பி.சி.சி.ஐ.க்கு இதைப் பற்றி தெரிவித்துள்ளோம். சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஆட்டத்தை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று ஒரு சிஎஸ்கே அதிகாரி  தெரிவித்தார்.

ALSO READ: உயிரோட விளையாடாதீங்க, IPL ஐ உடனடியாக நிறுத்துங்க, முன்னாள் வீரர் கோரிக்கை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *