CBSE Board Exams 2021: இந்த வாரம் வெளிவருகிறது 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் date sheet

Spread the love


கொரோனா தொற்று உலகம் முழ்வதும் பரவி இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. அனைத்து துறைகளிலும் இந்த நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கல்வித் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.

CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் குறித்த அதிகரித்து வரும் ஊகங்களுக்கு மத்தியில், CBSE 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்காக நுழைவுச் சீட்டுகள், அதாவது, அட்மிட் கார்டுகளையும், அதன் பின்னர், 2021 ஆம் ஆண்டின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான டேட் ஷீட்டையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. CBSE தெர்வுகளில் நுழைவு பெற அட்மிட் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாகும்.

வழக்கமாக, பள்ளிகளுக்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கான அட்மிட் கார்ட் (Admit Card) பள்ளிகளில் கிடைக்கும். தனியாக, அதாவது ப்ரைவேட்டாக படிக்கும் மாணவர்கள் தங்கள் அட்மிட் கார்டுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு இதில் சில மாற்றங்கள் காணப்படும் என்று தெரிகிறது.

அறிக்கைகளின்படி, CBSE பள்ளிகள் ஒவ்வொரு மாணவருக்கும் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். மேலும் இந்த அட்மிட் கார்டுகளில் பள்ளி அல்லது பள்ளி அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட நபரின் டிஜிட்டல் கையொப்பங்கள் இருக்கும்.

அட்மிட் கார்டைப் பெற்ற பிறகு பெயர், பாடங்கள், பாடப்பிரிவின் குறியீடுகள் போன்றவற்றில் எழுத்துப்பிழைகள் உள்ளனவா என்பதையும் பிற விவரங்களையும் மாணவர்கள் சரிபார்க்க வேண்டும். மாணவர்கள் தங்கள் CBSE அட்மிட் கார்டில் பெயர்கள், பாதுகாவலர் பெயர்கள், பிறந்த தேதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களையும் சரிபார்க்க வேண்டும்.

CBSE, 10, 12 ஆம் வகுப்புகளுக்கான டேட் ஷீட்டுகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டேட்ஷீட் இந்த வாரம் ஆன்லைனில் வெளியிடப்படலாம். மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் (Ramesh Pokhriyal Nishank), பொதுத் தேர்வுகள் (CBSE, ISC/ICSE etc) மற்றும் நுழைவுத் தேர்வுகள் (NEET, JEE Main etc) தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் டிசம்பர் 10 ஆம் தேதி விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளார்.

ஒரு முன்னணி ஆங்கில போர்ட்டலுடன் பேசிய மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ், 2021 ஆம் வகுப்பு 10, 12 பொதுத் தேர்வுகளை தாமதப்படுத்தும் திட்டம் எதுவும் CBSE-க்கு இல்லை என்று கூறினார்.

CBSE-க்கு 2021 பொதுத் தேர்வுகளை ஆஃப்லைன் முறையில் நடத்துவது கடினமாக இருக்காது என்று பரத்வாஜ் கூறினார். “தொற்றுநோய்க்கு மத்தியில் CBSE கம்பார்ட்மென்ட் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதில் கிடைத்த கருத்துகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் பொதுத் தேர்வுகளை ஆஃப்லைன் முறையில் நிர்வகிப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

ALSO READ: 2021 ஆம் ஆண்டின் 10, 12, NEET, JEE தேர்வுகளை தள்ளிப்போடுமா CBSE?

இந்தியாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) பரவுவதைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி விதித்த லாக்டௌனால் 2020-21 கல்வி அமர்வு வெகுவாக பாதிக்கப்பட்டது. CBSE மற்றும் பல போர்டுகள் ஏற்கனவே தங்கள் பாடத்திட்டங்களைக் குறைத்துள்ளன. ஆனால் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதிலும் பள்ளிகள் சிரமத்தை எதிர்கொள்கின்றன.

இதற்கிடையில், CBSE சமீபத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் தேர்வுகளுக்கான மாதிரி வினாத் தாள்களை வெளியிட்டது. CBSE 10 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு (Board Exams) ஒரு புதிய வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் மதிப்பீட்டு திட்டத்தை வெளியிட்டுள்ளது. பொதுத் தேர்வுகளுக்குத் தயார் செய்துகொண்டிருப்பவர்கள், CBSE-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseacademic.in ஐப் பார்வையிடலாம். இதிலிருந்து அவர்கள் மாதிரி வினாத்தாள்களையும் மதிப்பீட்டு திட்டத்தையும் சரிபார்த்துக் கொள்ளலாம்.

ALSO READ: திருத்தப்படுகிறதா 2021 JEE Main, NEET syllabus: என்ன கூறுகிறது கல்வி அமைச்சகம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *