Coronavirus Vaccine குறித்து அரசு செய்த மிகப்பெரிய அறிவிப்பு என்ன தெரியுமா

Spread the love


கோவிஷீல்டின் பரிசோதனையின் போது கடுமையான பாதகமான விளைவுகளை சந்தித்ததாக சென்னையைச் சேர்ந்த ஒரு தன்னார்வலர் கூறியதையடுத்து, செவ்வாயன்று (டிசம்பர் 1) புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான கோவிஷீல்டுக்கு மத்திய அரசு தனது ஆதரவை தெரிவித்தது.

“ஆரம்ப காரண மதிப்பீட்டிற்குப் பிறகு, சீரம் சோதனைகளை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். “SII தடுப்பு மருந்து சோதனைகள் 3 ஆம் கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பின்னர், SII க்கு 3 ஆம் கட்டத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த மோசமான பாதிப்பு, தடுப்பு மருந்திற்கான பரிசோதனை கால அட்டவணையை பாதிக்காது என்று மூத்த அரசாங்க அதிகாரி வலியுறுத்தினார். மேலும் இதுபோன்ற சோதனைகளின் போது ஏதேனும் பாதகமான எதிர்விளைவுகள் ஏற்பட்டால் அவற்றை சரியான முறையில் எதிர்கொள்ள SII ஆல் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இவற்றில் முதலாவது “முன் அறிவிக்கப்பட்ட ஒப்புதல் படிவம்” ஆகும். இது பங்கேற்பதற்கு முன் ஒரு தன்னார்வலரால் கையொப்பமிடப்பட வேண்டும்.

“இரண்டாவதாக, இந்த தடுப்பு மருந்து சோதனைகள் பல மையங்களையும் பல தளங்களையும் கொண்டவை. தன்னார்வலர்களுக்கு மருத்துவ கவனிப்பின் கீழ் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது, அனைவரும் கண்காணிக்கப்பட்டு கவனிக்கப்படுகின்றன” என்று பூஷண் கூறினார்.

“ஒவ்வொரு தளத்திலும் ஒரு நிறுவன நெறிமுறைகள் குழு உள்ளது. இது ஸ்பான்சர்கள் மற்றும் அரசாங்கத்திலிருந்து சுயாதீனமாக உள்ளது. ஒரு பாதகமான நிகழ்வு நிகழும் போதெல்லாம், நெறிமுறைக் குழு அதைக் கவனித்து, விசாரித்து, இது குறித்த தனது கருத்துக்களை 30 நாட்களுக்குள் கட்டுப்பாட்டாளருக்குக் கொடுக்கிறது. ”

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29), ‘கோவிஷீல்ட்’ (Covishield) என்னும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் கடுமையான பக்கவிளைவுகளைப் பற்றி கூறிய ஒரு தன்னார்வலரின் கூற்றுக்களை SII நிராகரித்தது.

ALSO READ: கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையக்கூடும்: புதிய ஆய்வு..!

“அறிவிப்பில் உள்ள குற்றச்சாட்டுகள் தீங்கிழைக்கும் மற்றும் தவறான எண்ணம் கொண்டவை. இந்திய சீரம் நிறுவனம் தன்னார்வலரின் மருத்துவ நிலை குறித்து அனுதாபம் கொண்டிருந்தாலும், கொரோனா தடுப்பு மருந்தின் (Corona Vaccine) சோதனைக்கும் தன்னார்வலரின் மருத்துவ நிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று இந்தியாவின் சீரம் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பி.டி.ஐ அறிக்கையின்படி, சீரம் நிறுவனத்தின் COVID-19 தடுப்பு மருந்து பாதுகாப்பாக இல்லை என்று சென்னை நபர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் நரம்பியல் முறிவு மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளின் குறைபாடு உள்ளிட்ட கடுமையான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

ALSO READ: 10 பேரில் 7 பேர் தொடர்ந்து முகமூடி அணிந்தால் கொரோனாவை நிறுத்தலாம்: ஆய்வு

SII மற்றும் பிறருக்கு அவர் அனுப்பியுள்ள சட்டப்பூர்வ நோடீசில், அவர் 5 கோடி ரூபாய் இழப்பீடும் கோரியுள்ளார். மேலும் அதன் சோதனை நிறுத்தப்பட்டு, உற்பத்தி மற்றும் விநியோகம் தடுக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் சட்ட நடவடிக்கை கோரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *