COVID-19 தடுப்பூசி இயக்கத்தில் மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி

Spread the love


இந்திய தொலைத் தொடர்பு துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4வது இந்திய மொபைல் காங்கிரஸ் ( IMC) நிகழ்வை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

அதில்  உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), நாட்டில் சரியான நேரத்தில் 5 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வரவிருக்கும் தொழில்நுட்ப புரட்சியின் மூலம் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துகிறோம் என்பதை சிந்தித்து திட்டமிட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 ஐ ( IMC 2020) தொலைத்தொடர்பு துறை, இந்திய அரசு மற்றும் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்வு 2020 டிசம்பர் 8 முதல் 10 வரை நடக்கும்.

கோவிட் -19 (COVID-19) தடுப்பூசி இயக்கத்தில் மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என பிரதமர் கூறினார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க விரைவில் தடுப்பூசிகள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளுக்கு மத்தியில், கோவிட் -19 தடுப்பூசி பிரச்சாரத்தில் மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மொபைல் தொழில்நுட்பதை  சரியான முறையில் பயன்படுத்தும் பயனாளிகள், அதன் மூலம் லட்சக்கணக்கில் இலாபம் அடைந்துள்ளனர் என பிரதமர் மோடி கூறினார். கொரோனா வைரஸ் (Corona virus) தொற்றுநோய்களின் போது கூட, இந்த தொழில்நுட்பம் சமூகத்தின் ஏழை மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு உதவ நிறைய உதவியுள்ளது என்றார். மொபைல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகின் மிகப்பெரிய கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான தகவல்கள் மற்றும் பிரச்சாரம் சிறப்பாஜ்க மேற்கொள்ளப்படும் என்று மோடி கூறினார்.

பிரதமர் மோடி தனது உரையில், ‘சிறந்த சுகாதாரம், சிறந்த கல்வி, சிறந்த தகவல் மற்றும் நமது விவசாயிகளுக்கான வாய்ப்புகள், சிறு வணிகங்களுக்கு சிறந்த சந்தை அணுகல் ஆகியவை வரவிருக்கும் தொழில்நுட்ப புரட்சியின் வலிமையில் நாம் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய சில குறிக்கோள்கள் ‘ என அவர் குறிப்பிட்டார்

ALSO READ | Covid vaccine: அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோரும் Bharat Biotech 

இந்தியாவை (India) தொலைத் தொடர்பு மையமாக மாற்ற வேஎண்டும் என அவர் கூறினார். ‘தொலைதொடர்பு உபகரணங்கள், வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம். 5 ஜி தொழில்நுட்பத்தை சரியான நேரத்தில் தொடங்குவதை உறுதிப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ‘ என பிரதமர் கூறினார்

‘தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் முயற்சிகளால் தான் தொற்றுநோய் இருந்தபோதிலும் உலகம் சுறுசுறுப்பாக இருந்தது. தொழில்நுட்ப முயற்சியால் தான் ஒரு மகன் தனது தாயுடன் வேறு ஒரு நகரத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு பார்த்து பேச முடிகிறது. ஒரு மாணவர் தனது ஆசிரியரிடமிருந்து வகுப்பிற்கு வராமலேயே கற்றுக்கொள்கிறார். ஒரு நோயாளி தனது வீட்டிலிருந்தே தனது மருத்துவரை அணுக முடிகிறது. ஒரு தொழிலதிபர் மற்றொரு மாநிலத்திலும் பிரதேசத்திலும் இருந்தாலும் தனது நுகர்வோருடன் தொடர்பு கொள்கிறார்’ என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்

மொபைல் தொழில்நுட்பத்தின் காரணமாக லட்சக் கணக்கான இந்தியர்களுக்கு பல விதமான நன்மைகளை வழங்க முடிகிறது. மொபைல் தொழில்நுட்பத்தின் காரணமாக, தொற்றுநோய்களின் போது ஏழைகளுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் பல வகைகளில் உதவ முடிந்தது என்றார்.

ALSO READ | பெட்ரோல் டீசல் விலை ₹100-ஐ எட்டுமா… நிபுணர்கள் கூறுவது என்ன..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *