Dec 8 பாரத் பந்த்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் என்ன

Spread the love


புதுடெல்லி: செவ்வாயன்று, விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நடக்கவிருக்கும் ‘பாரத் பந்தின்’ போது பாதுகாப்பை கடுமையாக்குமாறும் அமைதியை நிலைநாட்டுமாறும் அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் தனி மனித இடைவெளி தொடர்பாக வெளியிடப்பட்ட COVID-19 வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாடு தழுவிய ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடைகளை மூடவோ அல்லது போக்குவரத்தை நிறுத்தவோ யாராவது ஆர்ப்பாட்டம் செய்தால், அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்குமாறு மத்திய அரசு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. போக்குவரத்து, சந்தைகள் என அனைத்தும் நாளை வழக்கம் போல் செயல்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

“பாரத் பந்த்” (Bharat Bandh) சமயத்தில் அமைதி பேணப்பட வேண்டும் என்றும், நாட்டில் எங்கும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதெசங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் திங்களன்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால அமர்வில் இயற்றப்பட்ட மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் சங்கங்களால் ‘பாரத் பந்த்’ அழைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், என்.சி.பி, திமுக (DMK), எஸ்பி, டிஆர்எஸ் மற்றும் இடதுசாரிகள் போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை பந்திற்கு வலுவான ஆதரவை தெரிவித்தன.

புதிய வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் (Delhi) பல்வேறு மாநில எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சனிக்கிழமையன்று அரசாங்கத்துக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடிவேதும் எடுக்கப்படாமல் முடிந்தது. ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. புதிய வேளான் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாய தொழிற்சங்கத் தலைவர்கள் உறுதியாக நிற்கின்றனர். தெளிவான முறையில் தங்களுக்கு “ஆம்” அல்லது “இல்லை” என்ற பதில் வேண்டும் என சிலர் மௌன விரதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அரசாங்கம் டிசம்பர் 9 ஆம் தேதியன்று மற்றொரு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ALSO READ: Farmers Protest: விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்

நாட்டின் உயிர் நாடியாக இருக்கும் விவசாயிகளின் (Farmers) உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியமான விஷயங்களாகும்.

மத்திய அரசாங்கமும் (Central Government) இது குறித்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. விவசாய பிரதிநிதிகளுடன் அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். விவசாயிகளும் தங்கள் போராட்டங்களில் மற்ற தேச விரோதிகள் குளிர் காயாதவாறு கவனமாக இருக்க வேண்டும். விவசாயிகளின் போர்வையில் சில மக்கள் விரோத சக்திகள் வன்முறையை தூண்ட முயற்சிப்பதாகவும் தகவல்கள் வருவதால், உண்மையான போராட்டமும், நியாயமான கருத்துகளும் வன்முறையின் கீழ் மறைக்கப்படுவதற்கும் மிதிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே அரசாங்கம், விவசாயிகள் என இரு தரப்பினரின் ஒருமித்த எண்ணம் என்பதில் சந்தேகமில்லை.

ALSO READ: விவசாயிகள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்: நடிகர் கார்த்தி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *