Diamond: லட்சக்கணக்கான மதிப்புள்ள வைரத்தை ஏழை விவசாயிக்கு கொடுக்கும் வயல்

Spread the love


மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற செய்திகளுக்கு மத்தியில் விவசாயி ஒருவரின் அதிர்ஷ்டம் பற்றிய செய்தி வைரலாகிறது.

45 வயதான லகன் யாதவ், என்ற விவசாயியிக்கு 60 லட்சம் மதிப்புள்ள வைரம் வயலில் இருந்து கிடைத்துள்ளது. இதில் சுவையான செய்தி என்னவென்றால், இந்த நிலத்தை அவர் 200 ரூபாய்க்கு குத்தகைக்கு (lease) எடுத்துள்ளார் என்பது தான். வைரத்தை விற்று கிடைத்த பணத்தில் முதன்முறையாக தனக்கென ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கியிருக்கிறார் லகன் யாதவ். 

6 மாதங்களுக்கு குத்தகையை மேலும் நீட்டித்து இன்னும் வைரங்கள் இருக்கிறதா என்று தேடிக் கண்டுப்பிடிக்க முயற்சிப்பதாகவும் லகன் கூறுகிறார்.மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த (Madhya Pradesh) விவசாயி ஒருவர் நிலத்தில் இருந்து வைரம் கிடைத்தது. எனவே  ஒரே இரவில் லட்சாதிபதியாகிவிட்டார்.

45 வயதான லகன் யாதவ் 10க்கு 10 என்ற சிறிய நிலத்தில் குழி தோண்டும்போது அவருக்கு வைரம் (diamond) ஒன்று கிடைத்தது. லகன் இந்த நிலத்தை வெறும் 200 ரூபாயில் குத்தகைக்கு எடுத்திருந்தார், அதில் கிடைத்த வைரத்தின் மதிப்பு 60 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Also Read |  26.6 மில்லியன் டாலர் ஏலத்தில் விற்பனையான வைரம் யாருடையது?

குட்டிக் கல் 14.98 காரட் வைரம் 
குட்டிக் கல், ஆனால் வைரமாக இருப்பதால் 60 லட்சம் ரூபாய் மதிப்புடையதாக இருக்கிறது.இந்த செய்தியை பிரபல ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது. தனது சிறிய வயலைத் தோண்டும்போது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த (Madhya Pradesh) லகன் யாதவுக்கு சிறிய கல் ஒன்று கிடைத்தது.  முதலில் இந்தக் கல் பொதுவான கற்களிலிருந்து வேறுபட்டு இருந்ததுஅதை ஆராய்ந்து பார்த்தபோது, உண்மையில் அது சாதாரணக் கல் அல்ல, 14.98 காரட் வைரம் என்பது தெரியவந்தது. சனிக்கிழமை நடந்த ஏலத்தில் அதன் விலை 60 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயலில் ஒரு வைரத்தைக் கண்டுபிடித்த லகன் யாதவ் தனது கையில் சாதாரண கற்களையும், வைரத்தையும் ஒன்றாக வைத்திருந்த தருணத்தை ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறுகிறார். பிற கற்களில் இருந்து ஒன்றே ஒன்று சற்றே வித்தியாசமாக இருந்தது. அதை துடைத்துப் பார்த்தப்போது அது ஒரு விலைமதிப்பற்ற கல் என்பதை அவர் புரிந்துகொண்டார். அவர் இந்த கல்லை எடுத்து மாவட்டத்தின் வைர அதிகாரியிடம் சென்று பரிசோதித்தார். உண்மையில் அதுவொரு வைரம் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. 

வைரத்திற்கு கிடைத்த பணத்தில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு மோட்டார் சைக்கிளை லகன் வாங்கினார். குழந்தைகளின் கல்விக்காக பணத்தை செலவிடுவார். இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்வீர்கள் என்று யாதவிடம் கேட்டதற்கு, ‘நான் பெரியதாக எதுவும் செய்ய மாட்டேன், நான் அதிகம் படிக்கவில்லை, எனது 4 குழந்தைகளையும் நன்றாக படிக்க வைக்க விரும்புகிறேன். அதற்காக இந்த பணத்தை வங்கியில் வைப்புத்தொகையாக (fixed deposit) டெபாசிட் செய்வேன். குத்தகைக்கு எடுத்திருக்கும் நிலத்தின் குத்தகையை இன்னும் சில மாதங்களுக்கு நீட்டிப்பேன். அதில் இன்னும் கொஞ்சம் வைரங்கள் இருக்கிறதா கண்டுபிடிக்க முயற்சிப்பேன்’ என்று லகன் கூறுகிறார்.

 Also Read | வைரத்தின் வைடூரியமான பொன்னான புதையலைப் பார்க்கலாமா? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *