Eco Bridge: விலங்குகள் சாலையை கடக்க உதவும் பாதுகாப்புப் பாலம்

Spread the love


புதுடெல்லி: உத்தரகண்ட் வனத்துறை விலங்குகள் சாலைகளை கடக்க உதவும் வகையில் ‘சுற்றுசூழல் பாலம்’ (Eco Bridge) என்று அழைக்கப்படும் இருவழி தொங்கு பாலத்தை உருவாக்கியுள்ளது. நைனிடால் நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்களுக்கு இடையே இந்த சிறப்புவகைப் பாலம் கட்டப்பட்டுள்ளது. வகையான பாலத்தை கட்டியுள்ளது.

இந்த சுற்றுச்சூழல் பாலம் 90 அடி நீளமுள்ள மூங்கில், சணல் மற்றும் புல் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது இந்த ‘சுற்றுசூழல் பாலம்’ (Eco Bridge) . வெறும் 10 நாட்களில் 2 லட்சம் ரூபாய் செலவில் இந்தப் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டிருக்கும் நெடுஞ்சாலை, நைனிடாலுக்கு (Nainital) செல்வதற்கான முக்கிய பாதையாகும். Kaladhungi-Nainital நெடுஞ்சாலையை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துகின்றனர். அதிலும் சுற்றுலா (tourist) சீசனில் இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும்.  

Also Read |  நீரெலிகள் உருவாக்கிய அற்புதமான அணை @Beavers 

இந்த நெடுஞ்சாலையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள வனப் பகுதியில் பல்லிகள், பாம்புகள், மலைப்பாம்புகள், அணில்கள், குரங்குகள் வசிக்கின்றன. ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் (reptiles) இந்த பாதையை  பயன்படுத்தும்போது பலமுறை வாகனங்களின் கீழ் நசுங்கி உயிரிழக்கின்றன.  

40 அடி உயரத்தில் 5 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் நடுத்தர எடையுள்ள மூன்று மனிதர்களின் மொத்த எடையை எடுக்க எடையை தாங்க்க்கூடியது. இந்தப் பாலத்தை ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் மட்டுமல்ல, சிறுத்தைகள் கூட பயன்படுத்தப்படும் என்று நம்புவதாக வன அதிகாரிகள் கூறுகின்றனர்.

நான்கு கேமரா பொறிகளால் (camera traps) இந்த பாலம் கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ராம்நகர் பிரதேச வன அலுவலர் (Ramnagar Divisional Forest Officer (DFO)) சந்திர சேகர் ஜோஷி தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பல்வேறு விஷயங்களை அறிந்துக் கொண்டு, உயிரினங்களின் பாதுகாப்புக்காக திட்டமிடலாம்.

Also Read | Utah பாலைவனத்திலிருந்து மர்மமான உலோக ஒற்றைப் பாளம் மறைந்துவிட்டதா?

சாலை ஒரு பரந்த `U` வடிவத்தில் வளைந்திருக்கும் இடத்தில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மலையில் இருந்து கீழ்நோக்கி செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் அதிவேகத்தில் பயணிப்பதால், சாலையை கடக்க ஏதேனும் உயிரினங்கள் வந்தால் திடீரென பிரேக் போடுவதற்கான தேவையை குறைப்பதன் மூலம், இந்த பாலம் மனிதர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக வன அதிகாரி கூறுகிறார்.  

“இது ஒரு அடர்ந்த காடு, யானைகள், சிறுத்தைகள், மான்கள், காட்டெருமைகள் இந்த பகுதியில் வசிக்கின்றன. விலங்குகள் வனத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன. வாகன ஓட்டுநர்கள் அவற்றை சிறிது தூரத்தில் இருந்து பார்க்கலாம் அல்லது மெதுவாக அல்லது நிறுத்தலாம், ஆனால் பாம்புகள், பல்லிகள், அல்லது அணில்கள் செல்லும்போது தொலைவில் இருந்து பார்க்க முடிவதில்லை” என்று ராம்நகர் பிரதேச வன அலுவலர் (Ramnagar Divisional Forest Officer (DFO)) சந்திர சேகர் ஜோஷி தெரிவித்தார்.

ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் மற்றும் பிற சிறிய விலங்குகள் பாலத்தை கடந்து செல்ல ஈர்க்க வேண்டும் என்பதற்காக, இலைகள் கொடிகளை அந்த பாலத்தின் மேல் படரவிடுவதாக சந்திர சேகர் ஜோஷி தெரிவித்தார்.  

ஊர்வன உட்பட வன விலங்குகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பலகைகள் வைக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார். மிகவும் முக்கியமாக இந்த பாலத்தை சுற்றுலாப் பயணிகள் பாலத்தை (selfie) செல்ஃபி எடுக்க செல்லாமல் தடுப்பதற்க்க வன ஊழியர்கள் இப்பகுதியில் ரோந்து செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

Also Read | பனி படர்ந்த ஜம்மு-காஷ்மீரின் புகைப்பட சுற்றுலா 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR 

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *