
‘Hack’ செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு தகவல்கள்! NIC-ல் Cyber Attack!!
புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தரவு நிறுவனமான தேசிய தகவல் மையத்தில் (NIC) இணைய தாக்குதல் நடந்துள்ளதாக செய்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த சைபர் தாக்குதலின் (Cyber Attack) மூலம் NIC-ன் பல கணினிகள் குறிவைக்கப்பட்டன மற்றும் முக்கியமான தகவல்கள் களவாடப்பட்டுள்ளன என்றும் நம்பப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களின் திருட்டு!!
தேசிய தகவல் மையத்தில் பிரதமர், NSA உள்ளிட்ட தேசிய நலன் தொடர்பான தகவல்கள் பல உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இந்த இணைய தாக்குதல் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. தகவல்களின்படி, இந்த சைபர் தாக்குதல் பெங்களூரைச் (Bengaluru) சேர்ந்த ஒரு நிறுவனத்தால் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்புகள் அமெரிக்காவுடன் (America) இருப்பதாகத் தெரிகிறது. NIC-யின் தரவுத் தளத்தில், தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களுடன், இந்திய குடிமக்கள், இந்தியாவில் உள்ள VVIP-க்கள் ஆகியோரின் தகவல்களும் உள்ளன.
ALSO READ: உங்களுக்கு Call Warning குறித்து அரசு எச்சரிக்கை!! Call Warning என்றால் என்ன? அறிக
மின்னஞ்சல் வழியாக தாக்குதல்!
டெல்லி காவல்துறையின் (Delhi Police) சிறப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவல்களின்படி, NIC கணினிகளில் மின்னஞ்சல்கள் மூலம் தீம்பொருள் (Malware) அனுப்பப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்தால் நமது கணினியில் உள்ள அனைத்து தகவல்களும் மறைந்துவிடும். அப்படித்தான் இப்போதும் நடந்துள்ளது. அதன் பின்னர் டெல்லி போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவல் வெளிச்சத்திற்கு வந்தவுடன், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வழக்கை விசாரிக்கத் தொடங்கியது.
பெங்களூரு நிறுவனத்துக்கு தொடர்பு, அமெரிக்க இணைப்பு உள்ளதா?
NIC ஊழியர்களின் புகாரின் பேரில் மின் அஞ்சல் குறித்த ஆராய்ச்சி செய்யப்பட்டபோது, அதன் இணைப்பு பெங்களூரு நிறுவனத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது. போலீஸ் விசாரணையில் இந்த நிறுவனத்தின் ஐபி முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் தொடர்புகொண்டுள்ளது பற்றி தெரிய வந்துள்ளது.
ALSO READ: PM Modi உட்பட பல VIP-க்களை உளவு பார்க்கும் சீனாவின் சில்லறைத்தனம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR