List of Holidays in 2021: 2021 ஆண்டின் விடுமுறை நாட்கள் குறித்த விபரங்கள்..!!!

Spread the love


புதுடில்லி: 2020 ஆம் ஆண்டு நிறைவடைந்து, விரைவில் புத்தாண்டு 2021 பிறக்க உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் பல ஏற்ற தாழ்வுகளைக் கொண்டுள்ளது.

விடுமுறைகள் நாட்கள் அதிகம் இருந்தும் கூட மக்கள் தங்கள் விடுமுறை நாட்களை அனுபவிக்கத் தவற விட்ட ஆண்டு என்றால் அது 2020ஆம் ஆண்டு தான்.

கொரோனா தடுப்பூசி ( Corona Vaccine) புதிய ஆண்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதால், புதிய ஆண்டு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. 2021 ஆண்டு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அதன் வருகைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். 

2021 ஆம் ஆண்டில் விடுமுறைக்கு வெளியில் செல்லலாம் என மக்கள் திட்டம் தீட்டும் போது, விடுமுறை நாட்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே அறிந்திருந்தால்,  விடுமுறை கொண்டாட்டத்தை இரட்டிபாக்க, சிறந்த வழியில் திட்டமிடலாம். இதைக் கருத்தில் கொண்டு, 2021 ஆம் ஆண்டின் அரசு விடுமுறைகள் மற்றும் விருப்ப்ப விடுமுறைகள் ( gazetted holidays 2021 and restricted holidays 2021) பட்டியலை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். இதற்கு ஏற்ப உங்கள் ரயில் டிக்கெட்டுகள் அல்லது சுற்றுலா இடங்களுக்கான பேக்கேஜ்களை முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம்.

2021 விடுமுறைகள் மற்றும் முக்கிய தினங்கள்

1. ஜனவரி
இந்த மாதத்தில் நாடு முழுவதிற்குமான விடுமுறையில் ஒரே ஒரு அரசு விடுமுறை தான் உள்ளது. அது ஜனவரி 26 செவ்வாய். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் இருப்பதால், திங்களன்று ஒரு நாள் அலுவலகத்தில் விடுப்பு எடுத்தால், மொத்தம் நான்கு நாட்கள் பயணம் செய்யலாம்.

ஜனவரியில் விடுமுறைகள் மற்றும் முக்கிய தினங்கள்
01 ஜனவரி 2021 (வெள்ளிக்கிழமை) புத்தாண்டின் முதல் நாள்.
13 ஜனவரி 2021 (புதன்கிழமை) போகி பண்டிகை
14 ஜனவரி 2021 (வியாழக்கிழமை) பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி.
20 ஜனவரி 2021 (புதன்கிழமை) குரு கோவிந்த் சிங் ஜெயந்தி.

2. பிப்ரவரியில் விடுமுறைகள் மற்றும் முக்கிய தினங்கள் 
பிப்ரவரியில் அரசு விடுமுறைகள் இல்லை. 

பிப்ரவரியில் உள்ள விருப்ப விடுமுறைகள்
16 பிப்ரவரி 2021 (செவ்வாய்) வசந்த பஞ்சமி
19 பிப்ரவரி 2021 (வெள்ளிக்கிழமை) சிவாஜி ஜெயந்தி.
26 பிப்ரவரி 2021 (வெள்ளிக்கிழமை) ஹஸ்ரத் அலி பிறந்த நாள்
27 பிப்ரவரி 2021 (சனிக்கிழமை) குரு ரவிதாச ஜெயந்தி
3.மார்ச்
மார்ச் மாதத்தில் இரண்டு அரசு விடுமுறைகள் உள்ளன. 
மார்ச் 11  (வியாழக்கிழமை) மகாசிவராத்ரி விடுமுறை 
மார்ச் 28 (ஞாயிறு)  ஹோலி பண்டிகை விடுமுறை 
விருப்ப விடுமுறை நாட்களில் மார்ச் மாதத்தில்,

08 மார்ச் 2021 (திங்கள்) மகரிஷி தயானந்த் சரஸ்வதி ஜெயந்தி.
28 மார்ச் 2021 (ஞாயிறு) ஹோலி தகனம்

ALSO READ | தீராத பணப்பிரச்சனையை தீர்க்கும் எளிய வாஸ்து குறிப்புகள்..!!!

4. ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் உங்களுக்கு பல விடுமுறைகள் இருக்கும். 
 2 ஏப்ரல் (வெள்ளிக்கிழமை)புனித வெள்ளி 
13 ஏப்ரல்- (செவ்வாய் கிழமை) தெலுங்கு வருட பிறப்பு
14 ஏப்ரல் 2021 (புதன்கிழமை) தமிழ் புத்தாண்டு
21 ஏப்ரல் (புதன்கிழமை) ராம நவமி.
25 ஏப்ரல் (ஞாயிற்றுக் கிழமை) மாகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் மாதத்தில் விருப்ப விடுமுறை நாட்கள்
4 ஏப்ரல்  (ஞாயிறு) ஈஸ்டர் தினம்
14 ஏப்ரல் (புதன்கிழமை) – அம்பேத்கர் ஜெயந்தி 

5. மே
இந்த மாதத்தில் இரண்டு விடுமுறைகள் உள்ளன. 
மே 1 (சனிக்கிழமை) மே தினம்
மே 12 (புதன்கிழமை) ரம்ஜான்
மே 26 (புதன்கிழமை) புத்த பூர்ணிமா 

6. ஜூன்
ஜூன் மாதம் விடுமுறை ஏதும் இல்லை

7. ஜூலை
ஜூலை மாதத்தில் ஒரே ஒரு விடுமுறை மட்டுமே உள்ளது.

ஜூலை 21  (புதன்கிழமை), ஈத்-உல் ஜூஹா (பக்ரீத்) 

ALSO READ | Vastu Tips: வீட்டில் மகிழ்ச்சி பொங்க உதவும் வாஸ்து குறிப்புகள்..!!!

8. ஆகஸ்ட்
ஆகஸ்டில் பண்டிகைகள் மற்றும் விடுமுறைகள் உள்ளன, ஆனால் இவை வார இறுதிகளில் வருகின்றன. 
ஆகஸ்ட் 2021 இல் விடுமுறை
ஆக்ஸ்ட் 15 – ஞாயிற்றுக் கிழமை – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 19 வியாழக்கிழமை மொஹர்ரம்
ஆகஸ்ட் 21 சனிக்கிழமை ஓணம்
ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக் கிழமை ரக்ஷா பந்தன்
ஆகஸ்ட் 30 திங்கள் அன்று கிருஷ்ண ஜெயந்தி

9.செப்டம்பர்
செப்டம்பரர் மாதத்தில் ஒரே ஒரு விடுமுறை மட்டுமே உள்ளது. அது செப்டம்பர் 10 வெள்ளிக்கிழமை கணேஷ் சதுர்த்தி தினமாகும்.

10. அக்டோபர் விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய தினங்கள்
அக்டோபர் 2 சனிக்கிழமை- காந்தி ஜெயந்தி.
அக்டோபர் 7 ஆம் தேதி- மகாராஜ் உக்ராசென் ஜெயந்தி
அக்டோபர் 14 – வியாழக்கிழமை-சரஸ்வதி பூஜை
அக்டோபர் 15 – வெள்ளிக்கிழமை -விஜயதசமி, அக்டோபர் 19 – செவ்வாய் கிழமை – மிலாடி நபி அக்டோபர் 20 –  தேதி மகரிஷி வால்மீகி ஜெயந்தி.

11. நவம்பர்
தீபாவளி நவம்பர் மாதத்தின் மிகப்பெரிய இந்து பண்டிகை. நவம்பர் 4 வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது.

12. டிசம்பர்
டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ALSO READ | Dry hair: குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போய்விட்டதா? இதோ Tips

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *