UP on High Alert: வேளான் மசோதாக்களால் வலுக்கும் போராட்டங்கள், தொடரும் பதட்டம்!!

Spread the love


நாடாளுமன்றம் நிறைவேற்றிய மூன்று வேளான் மசோதாக்களுக்கு (Farm Bills) எதிராக, விவசாயிகள் குழுக்கள் மற்றும் அரசியல் எதிர்கட்சிகள் ‘பாரத் பந்த்’ (Bharat Bandh) ஏற்பாடு செய்துள்ள நிலையில், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை அதிக எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இப்பகுதியில் உள்ள பல்வேறு விவசாயிகள் குழுக்களை ஒன்றிணைத்துள்ளது. உழவர் உற்பத்தி வர்த்தக மற்றும் வணிக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளான் சேவைகள் மசோதா, 2020 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) ஆகியவற்றிற்கு எதிராக விவசாயிகள் ஒன்றுகூடியுள்ளனர். இந்த மசோதாக்கள் புதன்கிழமை முடிவடைந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

விவசாய வர்த்தகத்தை தாராளமயமாக்கும் என்று அரசாங்கம் கூறும் மசோதாக்களை எதிர்த்து சனிக்கிழமை வரை பஞ்சாபில் (Punjab) மூன்று நாள் ரயில் முற்றுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மூலம் தங்கள் நலன்களை விட பெருநிறுவன நலன்கள்தான் ஊக்குவிக்கப்படும் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் (Uttar Pradesh) எந்தவொரு பெரிய உழவர் அமைப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரபிரதேசம்-டெல்லி-பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை பாரத் பந்தில் பங்கேற்பார்கள் என உழவர் தலைவர் நரேஷ் டிக்கைட் கூறினார்.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க உத்தரபிரதேச காவல்துறை மாநிலத்தின் மேற்கு பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்களை நிறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு அறிக்கையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் (Akhilesh Yadav) விவசாயிகளையும் தொழிலாளர்களையும் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றாக வருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் போராட்டத்தின் போது சமூக தூரத்தை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

ALSO READ:இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ள பஞ்சாப், ஹரியானாவில் வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டம்!!

வேளான் மசோதாக்கள் விவசாயிகளை தங்கள் விளைபொருட்களை மிக குறைந்த விலையில் விற்க கட்டாயப்படுத்தும் அதே வேளையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்யப்படுவது 300 அல்லது அதற்கும் குறைவான ஊழியர்கள் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய அனுமதிக்கும் என்று அவர் கூறினார்.

காங்கிரசின் உத்தரபிரதேச பிரிவு விவசாயிகளுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை முதல் அக்டோபர் 31 வரை மாநிலம் தழுவிய போராட்டங்களை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் (Congress) தொழிலாளர்கள், விவசாயிகளுடன் சேர்ந்து, திங்களன்று கெராவ் விதான் சபைக்கு வருவார்கள் என்று யுபிசிசி தலைவர் அஜய் குமார் லல்லு கூறினார்.

விவாதமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளான் மசோதாக்கள் “சந்தை மற்றும் முதலாளித்துவ சக்திகளின் தயவில் இப்போது விடப்பட்டுள்ள விவசாயிகளை காட்டிக் கொடுக்கும் மிகப்பெரிய செயல்” என்று அவர் கூறினார்.

‘ஒரு தேசம், ஒரு ஆதரவு விலை’ என்பதன் கீழ், மாநிலத்திற்கும், நாடு முழுவதற்கும் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு ஒரு வீதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. MSP புதிய சட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். விவசாயிகள் தங்கள் எந்தவொரு விளைபொருளுக்கும் MSP-ஐ விட குறைவான தொகையை பெறாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. 

ALSO READ: PM Kisan திட்டத்தின் கீழ் இந்த மாநில விவசாயிகளுக்கு மட்டும் 10,000 ரூபாய் கிடைக்கும்: விவரம் உள்ளே!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Previous Article
Next Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *